அதனைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவ மழை பெய்யும். நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நான்கு மாதங்கள் கடும் பனிப்பொழிவு காணப்படும். இச்சமயங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டும். இரவு நேரங்களிலும் குளிர் மிகவும் அதிகமாக காணப்படும். குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குளிரின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும்.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சில தினங்கள் உறை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் சமயங்களில் 0 அல்லது மைனஸ் டிகிரிக்கு வெப்ப நிலை சென்று விடும்.
இது போன்ற சமயங்களில் மிகவும் குளிர் அதிகமாக காணப்படும்.
இதனால், பகல் நேரங்களிலேயே சில சமயங்களில் குளிர் அதிகமாக காணப்படும் நிலையில், உள்ளூர் மக்கள் எப்போதும் வெம்மை ஆடைகளான ஸ்வெட்டர், ஜெர்கின், தொப்பி, சால்வை போன்ற வெம்மை அடைகளுடன் வலம் வருவது வழக்கம். மேலும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் ஊட்டியின் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் வெம்மை ஆடைகளான ஸ்வெட்டர்கள், ஜெர்கின் மற்றும் பருத்தி ஆடைகள் போன்றவைகளை வாங்கி உடுத்திக்கொள்வது வாடிக்கை.
இந்நிலையில், ஊட்டியில் தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் குளிர் அதிகமாக காணப்படுகிறது. சாலையோரங்களில் வெம்மை ஆடைகள் விற்பனை துவங்கியுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்கள் மற்றும் நடைபாதைகளில் வைத்து பலரும் இதுபோன்ற வெம்மை ஆடைகளை விற்பனை செய்யும் பணிகளை துவக்கி உள்ளனர். மற்ற கடைகளில் வாங்கினால் விலை அதிகம் என்பதால், இதுபோன்று சாலையோரங்கள் மற்றும் நடைபாதைகளில் விற்பனை செய்பவர்களிடம் பலரும் வெம்மை ஆடைகளை குறைந்த விலைக்கு வாங்கி உடுத்திக்கொள்கின்றனர்.
ஊட்டி மார்க்கெட், பூங்கா செல்லும் சாலை, படகு இல்லம் செல்லும் சாலை, கமர்சியல் சாலை நடைபாதை போன்ற பகுதிகளில் தற்போது இந்த வெம்மை ஆடை கடைகள் அதிகரித்துள்ளன. இந்த சாலையோர கடைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகள் ஸ்வெட்டர், ஜெர்கின் போன்றவைகளை அதிகளவு வாங்கிச்செல்கின்றனர்.
The post ஊட்டியில் கடும் குளிர் சாலையோரத்தில் வெம்மை ஆடை விற்பனை கடைகள் அதிகரிப்பு appeared first on Dinakaran.