×

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவார சங்காபிஷேக பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

வேலூர், டிச.10: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக பூஜையிலும் மற்றும் சிவன், ஓம் வடிவங்களில் தீபம் ஏற்றி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்குகளில் புனித நீரை நிரப்பி சங்குகளை யாகத்தில் வைத்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்யப்பட்டு பூர்னஹூதி நடந்தது. தொடர்ந்து பின்னர் 1008 சங்குகளை கொண்டு ஜலகண்டேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்து மகா தீபாராதனை நடந்தது. மேலும் நடராஜர் மண்டபத்தில் ஜலகண்டேஸ்வரர் ரூபத்தில் வடிவமைக்கப்பட்ட சிவலிங்க வடிவில் பக்தர்கள் தீபங்களை ஏற்றினர். இதேபோன்று அகிலாண்டேஸ்வரியம்மன் சன்னதியிலும் ஓம் வடிவில் மகாதீபங்களை ஏற்றி திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

The post வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவார சங்காபிஷேக பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Somavar ,Karthikai ,Jalakandeswarar temple ,Vellore Fort ,Vellore ,1008 Sangabhisheka Puja ,Somavar of Karthika ,Swami ,Shiva ,Om ,Vellore Fort Jalakandeswarar Temple ,Somavar Sangabhishek Puja ,
× RELATED சோமவாரத்தை முன்னிட்டு கோடீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்