தக்காளி காய் – 8,
வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 4,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
உளுந்து – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிது,
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தாளிக்க.
செய்முறை:
ஒரு வாணலியில் இரண்டு டம்ளர் தண்ணீரில் தக்காளி காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பத்து நிமிடம் வேகவிடவும். ஆறிய பிறகு மத்து கொண்டு நன்கு மசித்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, நன்றாக வதக்கவும். இதனுடன் மசித்து வைத்துள்ள தக்காளி காய் கரைசல் சேர்த்து, மிதமான சூட்டில் கொதிக்க விடவும். கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கி பரிமாறவும். இது இட்லி, தோசைக்கு சரியான ஜோடி. கூடுதல் சுவைக்கு வேக வைத்த சிறு பருப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
The post தக்காளி காய் கிச்சடி appeared first on Dinakaran.