பிறப்பால் யாராலும் முதல்வராக முடியாது சரித்திரம் புரியாதவர்கள்தான் மன்னராட்சி என்கின்றனர்: கார்த்தி சிதம்பரம் எம்பி சாடல்

சிவகங்கை: சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்பி நேற்று அளித்த பேட்டி: இந்தியாவில் யாராக இருந்தாலும் பிறப்பால் முதல்வராக முடியாது. எந்த அரசுப் பதவிக்கும் பிறப்பால் வர முடியாது. இன்று கோயில் டிரஸ்டியாக கூட பிறப்பை அடிப்படையாக வைத்து வர முடியாது. தேர்தலில் நின்று வெற்றி பெற்றுதான் பதவிக்கு வர முடியும். சரித்திரம் புரியாதவர்கள் தான் மன்னராட்சி இருக்கிறது என்கின்றனர். 1947ல் காங்கிரஸ் கட்சி மன்னராட்சியை ஒழித்து விட்டது. எந்தவிதத்திலும் இந்தியாவில் மன்னராட்சி இல்லை. அம்பேத்கரை பற்றி இவ்வளவு நாள் யோசிக்காதவர்கள் தற்போது யோசிக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். வேங்கைவயலையும், மணிப்பூரையும் ஒப்பிடுபவர்கள் அரசியல் புரிதல் இல்லாதவர்களாக இருப்பார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

The post பிறப்பால் யாராலும் முதல்வராக முடியாது சரித்திரம் புரியாதவர்கள்தான் மன்னராட்சி என்கின்றனர்: கார்த்தி சிதம்பரம் எம்பி சாடல் appeared first on Dinakaran.

Related Stories: