அலங்காநல்லூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை: எம்எல்ஏ வெங்கடேசன் அணிவித்தார்

 

அலங்காநல்லூர், டிச. 7: அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அலங்காநல்லூர் அருகே பெரியஊர்சேரி கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பேரூர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை தலைவர் சுவாமிநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் அருண், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் செந்தில்குமார், விசிக சார்பாக மாவட்ட செயலாளர் சிந்தனை வளவன், காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் சுப்பராயல் மற்றும் பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post அலங்காநல்லூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை: எம்எல்ஏ வெங்கடேசன் அணிவித்தார் appeared first on Dinakaran.

Related Stories: