சென்னை,: தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களில் பணியாற்றும் நூலகர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்படுவதை அடுத்து, சென்னையில் பயிற்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி நடக்கிறது. இதில் 850 நூலகர்கள் பங்கேற்கின்றனர். இந்த பயிற்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி: சென்னையில் ஐஐடி வளாகத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவ, மாணவியரை ஓட விட்டு மருத்துவ சோதனை (தாங்கு திறன்) செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதுபோன்ற முறை தவறானது. மாணவர்களை சோதனை செய்வது என்பது ஒன்றும் தனியாக இல்லை.
பள்ளிக் கல்வித்துறையில் பொதுவாக உடல்நலம் குறித்து அறிந்து கொள்ளச் செய்வது போன்றவை செய்யப்படும். எதற்காக ஓட விட்டு சோதித்துள்ளனர் என்பது தெரியவில்லை. என்ன எண்ணத்தில் இதை செய்துள்ளதுள்ளனர் என்பது தெரியவில்ைல. இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் மருத்துவர்கள் மூலம் எங்களுக்கு வரக்கூடிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்டு அதற்கான முடிவு எடுக்கப்படும். யாராக இருந்தாலும் உரிய நடவடிக்ைக எடுக்கப்படும். 3 மாவட்டங்களில் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 279 பள்ளிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
200 பள்ளிகளில் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும். டிசம்பர் 2ம் தேதியில் இருந்து அரையாண்டு செய்முறைத் தேர்வு நடக்க வேண்டியது. 15ம் தேதிக்குள் இயல்பு நிலை திரும்பினால் உடனடியாக தேர்வு நடத்தலாம் என்றும், பாதிப்பு அதிகம் உள்ள பள்ளிகளில் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுத்து நடத்தவும் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
The post மாணவர்களுக்கு தாங்கும் திறன் பரிசோதனை; பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி appeared first on Dinakaran.