×

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்

திருவள்ளூர்: தமிழ்நாடு ஊரகவளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடம் வழங்கப்பட்டு அவர் மூலம் ரூ.1 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்து முடிந்த பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மையத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் சீ.காந்திமதிநாதன், மாவட்டத் தலைவர் கௌ.மெல்கி ராஜா சிங், மாவட்ட செயலாளர் அ.மணி சேகர், மாவட்ட பொருளாளர் பி.மகேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் சரவண மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ரூ.1 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருட்களை திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமாரிடம் வழங்கி பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

The post ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் appeared first on Dinakaran.

Tags : Rural Development Officers Association ,Thiruvallur ,Tamil Nadu Rural Development Officers Association ,Thiruvallur District Rural Development Agency Program ,Benjal ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் இளைஞர் ஒருவர் செய்த செயலால் அப்பகுதியில் பரபரப்பு!