×

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்

 

திருப்பூர், டிச.6: திருப்பூர், கோர்டு வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டம் வட்டார வளர்ச்சி அதிகாரி அணார்கலி முன்னிலையில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணாம்பாள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கீதா, கல்பனா,பாலசுப்பிரமணி, ஜானகி, ரத்தினாம்பாள் மற்றும் ஐஸ்வர்யம் மகாராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒன்றிய நிதியில் இருந்து பணிகளுக்கு எப்போது நிதி வழங்கப்படும் எனவும், எவ்வளவு நிதி இருப்பில் உள்ளது என அதிகாரியிடம் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் தனது அலுவலகத்திற்கு வாருங்கள் தகவல் தருகிறேன் என தெரிவித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்ட அரங்கிலேயே தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைதொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகத்தில் நிதி எவ்வளவு உள்ளது என்பதை பார்த்து வந்து தெரிவித்தார். நிதி விரைவில் வழங்கினால் தான் கிடப்பில் போடப்பட்ட பணிகளையும், புதிய பணிகளையும் தொடங்க முடியும் எனக்கூறினர். இதனையடுத்து பணிகளுக்கு நிதி விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

The post திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupur panchayat union ,Tirupur ,panchayat ,panchayat union ,Kordu Road, Tirupur ,Regional Development Officer ,Anarkali ,President ,Sornambal ,Dinakaran ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!