கனிராவுத்தர் குளம் பஸ் நிறுத்தம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

 

ஈரோடு, டிச. 6: ஈரோடு, கனிராவுத்தர் குளத்தில் இருந்து பெரிய சேமூர் செல்லும் பிரதான சாலையின் நடுவில் பதிக்கப்பட்டுள்ள குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. ஈரோடு கனிராவுத்தர் குளம் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து பெரிய சேமூர் செல்லும் பிரதான தார்சாலையின் கீழ் பதிக்கப்பட்டுள்ள ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதன் மீது கனரக வாகனங்கள் செல்லவதால் உடைப்பு பெரிதாகி அதிக அளவில் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.

மேலும், தார்சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து, தண்ணீர் வெளியேறும் பகுதியில் சாலை பள்ளமாகி எந்த நேரமும் அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே, தினமும் குடிநீர் வீணாகி வருவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில், தொடர்ச்சியாக குழாய்களில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவது தொடர் நிகழ்வாகவே இருந்து வருகிறது. எனவே, இக்குடி நீர் திட்டப் பணிகளை தரமாக செய்து முடித்திட ஒப்பந்ததாரர்களிடம் மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்திட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கனிராவுத்தர் குளம் பஸ் நிறுத்தம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் appeared first on Dinakaran.

Related Stories: