ஈரோடு, டிச.20: ஈரோடு மேட்டூர் சாலைக்கு, மறைந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெயரை வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மறைந்த எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு இரங்கல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அக்கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நடந்த இரங்கல் கூட்டத்தில், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ஈரோடு அரசு மருத்துவமனை அருகேயுள்ள காமராஜர் சிலை முதல் சுவஸ்திக் கார்னர் வரை உள்ள மேட்டூர் சாலைக்கு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெயரை வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்துகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மூத்த காங்கிரஸ் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இலக்கியச் செல்வன், மாவட்ட பொதுச் செயலாளர் நடராஜ் ராஜமாணிக்கம், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post மேட்டூர் சாலைக்கு ஈவிகேஎஸ் பெயர் வைக்க தீர்மானம் appeared first on Dinakaran.