- ஜெயலலிதா
- திண்டுக்கல்
- திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக
- முதல் அமைச்சர்
- தொழிற்சங்க செயலாளர்
- முருகன்
- ஒன்றிய பொருளாளர்
- Maharajan
- பொன்னாகரம்
- ஜெயலலிதா நினைவு நாள் விழா
திண்டுக்கல், டிச. 6: திண்டுக்கல் அதிமுக கிழக்கு, மேற்கு மாவட்டம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பொன்னகரத்தில் நடந்த நிகழ்வில் ஜெயலலிதா படத்திற்கு ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் மகாராஜன், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் நாகராஜன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல் பஸ் ஸ்டாண்ட் அருகே எம்ஜிஆர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், மேற்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் பாரதி முருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்ரமணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
The post திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.