×

ஒட்டன்சத்திரம் அருகே தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது: திருப்பூரை சேர்ந்தவர்கள் கைது

 

ஒட்டன்சத்திரம், டிச. 6: ஒட்டன்சத்திரம் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட திருப்பூரை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அம்பிளிக்கை பகுதியில் பெண்களிடம் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன. இதுகுறித்த புகார்களின் பேரில் அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில்
டிஎஸ்பி கார்த்திகேயன் மேற்பார்வையில் நகை பறிப்பு திருடர்களை பிடிக்க சிறப்பு எஸ்ஐ சீனிவாசன், காவலர்கள் வேளாங்கண்ணி,

கார்த்திக்ராஜன், மோரிஸ் ஜோசப்ராஜ், காங்குமணி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படையினர் அம்பிளிக்கை பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்த சுந்தரம் (19), ஜஸ்வந்த்குமார் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஒட்டன்சத்திரம் அருகே தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது: திருப்பூரை சேர்ந்தவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Otanchatram ,Tirupur ,Othanchatram ,Ambilikai ,Ottanchatram ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!