சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: பல்லாவரத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததால், 33 பேர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர். 3 பேரின் உயிரிழப்பிற்கு தேமுதிக சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும். சிகிச்சை பெற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் வழங்கி முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.
The post குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.