வீடுகளில் இருக்கும் உணவுப் பொருட்களை தின்றும், கொட்டியும் நாசம் செய்கின்றன. விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. குறிப்பாக படையப்பா யானை கடந்த சில நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், குட்டியார் வாலி, சைலண்ட் வேலி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டிருந்த படையப்பா யானை கடந்த 12ம் தேதி இரவு 7.30 மணிக்கு சாலையில் இறங்கியது. அப்போது சைலண்ட் வேலி பகுதியில் சீரியல் ஷூட்டிங் முடிந்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் திரும்பிக் கொண்டிருந்தன.
அப்போது இடையில் புகுந்து சாலையின் நடுவே படையப்பா யானை சிக்கிக் கொண்டது. யானையின் முன்னும், பின்னும் வாகனங்கள் வந்தன. இதனால், தவித்த யானை ஒரு கட்டத்தில் ஆக்ரோஷம் அடைந்து இரண்டு கார்களை துதிக்கையால் அடித்து நொறுக்கியது. காரில் இருந்தவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியதால், காயமின்றி தப்பினர். தகவலறிந்து வந்த வனத்துறை யானை தடுப்பு பிரிவினர் படையப்பா யானையை விரட்டினர். இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மூணாறில் பரபரப்பு : கார்களை சேதப்படுத்திய படையப்பா யானை appeared first on Dinakaran.