×

எஸ்ஐ உட்பட 5 பேர் மீது வழக்கு வேலூர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத

வேலூர், டிச.6: வேலூர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத சிறப்பு எஸ்ஐ உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டவுன் போலீஸ் சிறப்பு எஸ்ஐயாக இருந்தவர் நாகராஜன்(56). இவர் மீது சிபிசிஐடி போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு மீதான விசாரணை வேலூர் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. ஆனால் நாகராஜன் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்துள்ளார். இதுகுறித்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற தலைமை எழுத்தர் வைஷாலியா சத்துவாச்சாரி போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்எஸ்ஐ நாகராஜன் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சசிகுமார்(33), வேலூர் விருதம்பட்டை சேர்ந்தவர் ராஜா(32). இவர்கள் மீது திருவலம் போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. விருதம்பட்டு மோட்டூரை சேர்ந்தவர் ராஜா(34), காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்தவர் இளையபெருமாள்(26). இவர்கள் மீது விருதம்பட்டு போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் மீதான விசாரணைக்கு வேலூர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதுகுறித்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற தலைமை எழுத்தர் வைஷாலியா கொடுத்த புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எஸ்ஐ உட்பட 5 பேர் மீது வழக்கு வேலூர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத appeared first on Dinakaran.

Tags : Vellore ,court ,Vellore court ,Nagarajan ,Vaniyampady ,Tirupathur district ,CBCID ,Dinakaran ,
× RELATED மனைவியை தவறான எண்ணத்தில் பார்ப்பதாக...