தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்

கரூர், டிச. 6: தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் கரூரில் 9ம் தேதி நடக்கிறது. தகுதியானவர்கள் பங்கே ற்று பயன் பெற கரூர் மாவ ட்ட கலெக்டர் தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, கரூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வளாகத்தில் டிசம்பர் 9ம்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வெற்றிகரமாக பயிற்சியை முடித்து இதுநாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியை மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள் தங்களது கல்வி சான்றிதழ, பாஸ்போர்ட் அளவு போட்டோ 2, ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற் சான்றிதழ் (சிஒஇ) தொழிற்பிரிவு சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொழிற்பழகுநர் திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற் பழகுநர்களின் வெட்புலத்தினை நிறைவு செய்திடும் வகையில் உரிய நிறுவன பதாதைகளுடன் முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகுநர்களை தேர்வு செய்து பயன்பெறலாம்.

மேலும், விபரங்களை அறியும் வகையில் உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், 2ம் தளம், மாவட்ட வேலை வாய்ப்பு வளாகம், வெண்ணைய்மலை, கரூர் முகவரியில் நேரிலோ அல்லது 04324 299422, 9443015914ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: