இதனையடுத்து பிரான்ஸின் புதிய பிரதமராக மிஷேல் பார்னியர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மிஷேல் பார்னியர் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றன. இதனால், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மிஷேல் பார்னியருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மிஷேல் பார்னியர் தோல்வியடைந்தார். மொத்தமுள்ள 577 உறுப்பினர்களில் 331 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்த தோல்வியைத் தொடர்ந்து தமது பிரதமர் பதவியை மிஷேல் பார்னியர் ராஜினாமா செய்தார். பிரான்ஸ் வரலாற்றில் 60 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு பிரதமரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பார்னியர் 91 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்துள்ளார். அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் இத்தகைய குறுகிய காலத்தில் பிரதமர் பதவியை இழந்தவராக மிஷேல் பார்னியர் அறியப்படுகிறார். அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து அதிபரும் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
The post நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி 91 நாளில் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு: பிரதமர் பதவியை இழந்தார் பார்னியர் appeared first on Dinakaran.