×

மண்சரிவில் பலி 7 பேர் குடும்பத்துக்கு ஓபிஎஸ் ரூ.1லட்சம் நேரில் வழங்கினார்

திருவண்ணாமலை: அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். திருவண்ணாமலை வ.உ.சி நகரில் மண் சரிவில் சிக்கி பலியான 7 பேரின் வீடுகளுக்கு சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த அவர்களின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதோடு, பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கினார். அதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் கூறுகையில், தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் தற்போது கனமழை தொடர்பாக வெள்ள நிவாரணத் தொகை கேட்டிருக்கிறது. இழப்பு ஏற்பட்டுள்ளதற்கு தகுந்தபடி ஒன்றிய அரசு போதிய நிவாரணத்தை உறுதியாக வழங்கும்’ என்றார்.

 

The post மண்சரிவில் பலி 7 பேர் குடும்பத்துக்கு ஓபிஎஸ் ரூ.1லட்சம் நேரில் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : OPS ,Thiruvannamalai ,Former ,AIADMK ,Chief Minister ,O. Panneerselvam ,VUC Nagar ,Mansari ,
× RELATED அரசு அதிகாரிகளை தாக்குவோர் மீது கடும்...