×

பைக்- வேன் மோதியதில் தொழிலாளர்கள் 3 பேர் பலி

 

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கடகக்குடியை சேர்ந்தவர்கள் வினோத்(32), பார்த்திபன்(26), மயிலாடுதுறை மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் இளையரசன்(28). கட்டிட தொழிலாளர்களான இவர்கள் காரைக்காலில் வேலை முடிந்து ஒரே பைக்கில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை வினோத் ஓட்டி வந்தார்.

திருவாரூர்- மயிலாடுதுறை நெடுஞ்சாலை இஞ்சிக்குடி அருகே பைக் வந்தபோது சிவகங்கையில் இருந்து மயிலாடுதுறை சென்ற வேன், பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிந்து வேன் டிரைவரான சிவகங்கை கீழவெண்மணியை சேர்ந்த அசோக்பாபுவை(42) கைது செய்தனர்.

The post பைக்- வேன் மோதியதில் தொழிலாளர்கள் 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Vinod ,Bartipan ,Nunnilam Taluga Kadagakudi ,Thiruvarur district ,Ilayarasan ,Mayiladuthura district ,Athur ,Karaikal ,
× RELATED திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம்