புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள்; எம்எல்ஏ சுந்தர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்


மதுராந்தகம்: பெஞ்சல் புயல் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கொடியசைத்து லாரிகளை அனுப்பி வைத்தார். பெஞ்சல் புயல் மாமல்லபுரம், புதுச்சேரி, காரைக்கால் இடையே கடந்த வாரம் கரையைக் கடந்தது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் புயல் காற்றுடன் கன மழை கொட்டியது. மேலும், மழை காரணமாக ஏராளமான பொதுமக்கள் பாதிப்படைந்தனர். இதனை அடுத்து, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் புளியல் மழையால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ ஏற்பாட்டில் 3 ஆயிரம் புடவை, 3 ஆயிரம் லுங்கி, ஆயிரம் கோரைப்பாய், 5டன் அரிசி உள்ளிட்ட நிவாரண உதவி பொருட்களை லாரிகள் மூலம் கருங்குழி அண்ணா சிலை அருகில் இருந்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கொடியசைத்து நேற்று அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள்; எம்எல்ஏ சுந்தர் கொடியசைத்து அனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: