- கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகம்
- கரூர்
- நிலவேம்பு
- கரூர் மாவட்டம்
- மாவட்ட சட்ட விவகார ஆணையம்
- மாவட்ட நீதிமன்ற வளாகம்
கரூர், டிச. 4: கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவர், மாவட்ட நீதிபதி அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பணியாள ர்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சித்தா மருத்துவமனை இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வினை கூடுதல் மாவட்ட நீதிபதி தங்கவேல் துவக்கி வைத்தார். இதில், அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைமாவ ட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழுவின் செயலாளர் அனுராதா செய்திருந்தார்.
The post கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.