×

கரூர் பைபாஸ் சாலை ஓரங்களில் கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாய நிலங்கள் பாதிப்பு

கரூர், டிச.4: கரூரை சுற்றிலும் உள்ள பைபாஸ் சாலையோரங்களில் பல்வேறு நிறுவனங்களின் கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாநகரம் தொழில் நகரமாக உள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். மக்கும், மக்காத குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்பட்டு அவைகள் தரம் பிரிக்கப்பட்டு வரும் மேலாண்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்காத தன்மை கொண்ட குப்பைகள் கரூரை சுற்றிலும் உள்ள பைபாஸ் சாலையோரங்களில் அவ்வப்போது வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்லும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதுபோன்ற மக்காத தன்மை கொண்ட குப்பைகள், மழைக்காலங்களில் மழையோடு மழையாக நனைந்து, வினை மாற்றம் ஏற்பட்டு, விவசாய நிலங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

ஆனாலும், மக்காத குப்பைகள் வாகனங்களில் கொண்டு வந்து, அவ்வப்போது கொட்டப்படும் நிகழ்வுகள் கருர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற குப்பைகள் முறைப்படி, மாநகராட்சி மூலம் அப்புறப்படுத்த வேண்டிய நிலையில், மறைமுகமாக வாகனங்களில் கொட்டப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பைபாஸ் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளின் தன்மை குறித்து கண்டறிந்து, அவ்வாறு கொட்டும் சம்பவங்களை கண்டறிந்து தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்துமேற் கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கரூர் பைபாஸ் சாலை ஓரங்களில் கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாய நிலங்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Karur ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகராட்சி பகுதி வழியாக...