கரூர், டிச. 4: கரூர் தாந்தோணிமலை அருகே மூதாட்டியிடம் தண்ணீர் கேட்பது போல நடித்து கழுத்தில் கிடந்த இரண்டு பவுன் செயினை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் அன்னக்கிளி(65). நேற்று முன்தினம் மதியம், இவர், வீட்டின் வெளியே நீண்ட நேரம் நின்று விட்டு, பின்னர், வீட்டுக்குள் சென்றார். இதனை நோட்டமிட்ட, பெண் ஒருவர், திடீரென அன்னக்கிளி வீடடுக்குள் சென்று, குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.மூதாட்டியும் அந்த பெண்ணுக்கு தண்ணீர் கொடுத்துள்ளார்.
தண்ணீர் குடித்த மறுநொடியே மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை அந்த பெண் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறி த்து மூதாட்டி தாந்தோணிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post தாந்தோணிமலை அருகே மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு: இளம்பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு appeared first on Dinakaran.