புழல், டிச. 5: புழல் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா கொடுத்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை புழல் விசாரணை சிறையில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களை பார்க்க உறவினர்கள், நண்பர்கள் என வந்து செல்கிறார்கள். இந்நிலையில் சென்னை மதுரவாயல் ஏரிக்கரை சேர்ந்த ஆரோக்கியம்(28) மதுரவாயல் காவல் நிலையத்தில் பதிவான அடிதடி வழக்கில் சிறையில் உள்ளார். இவரது மாமா செங்குன்றம் அடுத்த அலமாதி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்(28) நேற்று பார்க்க வந்தபோது அவர் ஆரோக்கியத்துக்கு கொடுத்த உடைகள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவற்றை சோதனை செய்தனர்.
பேன்ட் பெல்ட்டில் மறைத்து வைத்திருந்த இரண்டு கிராம் கஞ்சா சிக்கியது. இதேபோல் சென்னை புளியந்தோப்பு சேர்ந்த அப்துல்லா(35) புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பதிவான அடிதடி வழக்கில் சிறையில் உள்ளார். அவரைப் பார்க்க இவரது நண்பர்கள் சென்னை வியாசர்பாடி சேர்ந்த கௌதமன்(22), ஆடு தொட்டி சதீஷ்(25), ஆடு சந்தோஷ்(24) ஆகிய மூன்று பேரும் வந்து அப்துல்லாவிடம் பேசிவிட்டு உணவு பொருட்களை வழங்கினர். அவற்றை சோதனை செய்தபோது அதில் 3 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவலின் பேரில் புழல் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post புழல் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா கொடுத்த 4 பேர் கைது appeared first on Dinakaran.