இந்தூர்: ஐஐடி இந்தூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிறப்பு எல்இடி விளக்கு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான சேமிப்பகத்தை உருவாக்கி உள்ளனர். இந்த சேமிப்பகம் உணவுப்பொருட்களில் உள்ள நுண்ணியிரிகளை அழிப்பதோடு அதன் இனப்பெருக்கத்தை தடுக்கிறது. இதன் மூலம் உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாக்கும். குளிர்சாதன சேமிப்பகம் இல்லாமல் காய்கறி, பழங்களை பாதுகாக்க இந்த சேமிப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேராசிரியர் டெபயன் சர்க்கார் கூறுகையில், ‘‘ எங்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 10க்கு 10 அடி அறையில் 30 முதல் 40 நாட்கள் வரை பழங்கள், காய்கறிகளை குளிர்சாதன சேமிப்பு வசதி இல்லாமல் பாதுகாக்க முடியும். இதற்கு மாதம் ரூ.1000 மட்டுமே செலவாகும். இந்த கருவி மொபைல் ஆப் மூலம் இணைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
The post காய்கறிகளை சேமிக்க புதிய எல்இடி சேமிப்பகம் appeared first on Dinakaran.