புதுடெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா தலைமையிலான அரசில் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பார்த்தா சட்டர்ஜி. ஆசிரியர் பணி நியமனத்திற்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 2022 ஜூலை 23ல் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் வந்தது. நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் கூறும்போது, ‘இந்த வழக்கில் மேலோட்டமாக பார்த்தால் நீங்கள் ஒரு ஊழல்வாதி.
உங்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மீட்கப்பட்டது. இந்த மனு மூலம் சமூகத்திற்கு நாங்கள் என்ன செய்தி அனுப்ப விரும்புகிறீர்கள்? இந்த வழக்கில் சிக்கிய அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டதாக கேட்கிறீர்கள். ஆனால் எல்லோரும் அமைச்சராக இருக்கவில்லையே?. இருப்பினும் அவரை காலவரையின்றி சிறையில் வைத்திருக்க முடியாது என்பதால், அவரை விடுவிப்பது குறித்து நீதிமன்றம் ஆராயும்’ என்று கூறி தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
The post ஊழல்வாதியாக தெரிந்தாலும் காலவரையின்றி சிறையில் வைத்திருக்க முடியாது: மேற்குவங்க முன்னாள் அமைச்சர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.