×

பிச்சாவரம் சுற்றுலா மையம் செயல்பட துவங்கியது

புவனகிரி, டிச. 3: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வந்த மழை மற்றும் பலத்த காற்றால் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை காற்று, மழை எதுவும் இல்லாமல் வெயில் அடித்தது. இதனால் பிச்சாவரம் சுற்றுலா மையம் மீண்டும் செயல்பட துவங்கியது.நேற்று காலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்திற்கு வந்து படகுகள் மூலம் சுரபுன்னை காடுகளுக்கு சென்று காட்டின் அழகை சுற்றிப் பார்த்து ரசித்தனர். சுற்றுலா மையம் செயல்பட துவங்கினாலும் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. அதனால் பிச்சாவரம் சுற்றுலா மையம் வெறிச்சோடி காணப்பட்டது.

The post பிச்சாவரம் சுற்றுலா மையம் செயல்பட துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Pichavaram Tourism Center ,Bhuvangiri ,Bichavaram ,tourist center ,Parangippet ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED பரங்கிப்பேட்டை அருகே உலக பிரசித்தி...