5 வீடுகள், பள்ளி சுற்று சுவர் இடிந்தது சேத்துப்பட்டில் கனமழை

சேத்துப்பட்டு டிச.4: சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் நேற்று இடிந்து விழுந்தது. தேவிகாபுரத்தைச் சேர்ந்த காமாட்சி, அண்ணாமலை, கோவர்தன், பெருமாள், சுப்பிரமணி ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். மேலும், ஒதலவாடி செய்யாற்றில் உள்ள தேவிகாபுரம்-ஒதலவாடி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் குடிநீர் தொட்டி அருகில் உள்ள பைப்லைன் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் பத்தியாவரம், ஒதலவாடி, ஊத்தூர், நரசிங்கபுரம், தேவிகாபுரம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை தடை செய்யப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக உள்ளூர் நீர் ஆதாரம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

The post 5 வீடுகள், பள்ளி சுற்று சுவர் இடிந்தது சேத்துப்பட்டில் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: