₹10 கோடி வரையில் வியாபாரம் பாதிப்பு 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியது திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்கனமழை

திருவண்ணாமலை, நவ.4: திருவண்ணாமலை மாவட்டத்தில் ெதாடர் கனமழை காரணமாக ₹10 கோடி வரையில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் இதுவரை வரலாறு கண்டிராத பேய் பெய்துவிட்டது. இதனால் சாத்தனூர் அணை நிரம்பி 1.68லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தீபமலையில் மண்சரிவினால் சிறுவர்கள் உட்பட 7 பேர் மண்ணில் புதைத்து பலியாகினர். 2 நாட்களாக போராடி 7 பேரையும் சடலமாக மீட்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் மழையினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை, செய்யாறு, வெம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 37 வீடுகள் இடிந்து சேதமடைந்தது.

அதேபோல் 40 கால்நடைகள் மழையினால் பலியானது. சேத்துப்பட்டில் மழையினால் 5 வீடுகள், பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. ஆரணியில் 26 வீடுகள் சேதமடைந்தன. 6 மாடுகள் பலியானது. திருவண்ணாமலையில் செய்யாறு, வந்தாசி, ஆரணி, போளூர், செங்கம் என்று மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து கொண்டதால், வீடுகளில் உள்ள கட்டில், பீரோ, டிவி, உடமைகள், உணவுப்பொருட்கள் என்று பல லட்சக்கணக்கான பொருட்கள் சேதமடைந்தது. சேதமடைந்த பொருட்கள் கணக்கெடுக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதேபோல், சேதம் அடைந்த நெற்பயிர் கணக்கெடுப்பு பணிகளும் நடந்து வருகிறது. பெஞ்சல் புயலால் வழக்கமாக நடைபெறும் வியாபாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் ₹10 ேகாடிவரையில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

The post ₹10 கோடி வரையில் வியாபாரம் பாதிப்பு 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியது திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்கனமழை appeared first on Dinakaran.

Related Stories: