மளிகை கடைக்காரரை வெட்டிய வழக்கில் அதிமுக பிரமுகரின் மகன் உட்பட 2 பேர் பிடிபட்டனர்

திருத்தணி: திருத்தணியில், மளிகைக் கடைக்காரரை வெட்டிய வழக்கில் தலைமறைவான அதிமுக பிரமுகர் மகன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். திருத்தணி கந்தசாமி தெருவில் டில்லிபாபு (44) என்பவர் மளிகைக் கடை வைத்து ஈடுபட்டு வருகிறார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு டில்லிபாபுவை ஓடஓட விரட்டி 2 பேர் கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த டில்லிபாபு திருத்தணி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் இன்ஸ்பெக்டர் மதியரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில் திருத்தணியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான நாகூர் பிச்சை என்பவரின் மகன் முகமது யுசுப் அலி (20) என்பவர் அவரது கூட்டளியுடன் சேர்ந்து டில்லிபாபுவை வெட்டியது தெரியவந்தது. தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க டிஎஸ்பி கந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று முகமது யுசுப் அலி (20) மற்றும் திருத்தணியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து காவல் நியலையம் அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாரதியார் தெருவில் மதுபோதையில் பைக்கை சாலையில் நிறுத்தி அவ்வழியாக சென்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட டில்லிபாபுவை யுசுப் அலி அவரது கூட்டளியுடன் கத்தியால் குத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தொடர்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மளிகை கடைக்காரரை வெட்டிய வழக்கில் அதிமுக பிரமுகரின் மகன் உட்பட 2 பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: