அதில், கேரளாவை சேர்ந்த ஆசிப் (21), முகமது (21) ஆகியோர், காட்டாங்கொளத்தூர் பகுதியில் தங்கி, மாணவர்களுக்கு கஞ்சா ஆயில் விற்பது தெரிந்தது. கடந்த மாதம் 30ம் தேதி, அவர்களை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல் செய்தனர். இதனிடையே, இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த செல்போனில் பதிவாகி இருந்த எண்களை ஆய்வு செய்தபோது, பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகனின் செல்போன் எண் பதிவாகி இருந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், நேற்று மன்சூர் அலிகானின் மகன் உட்பட 4 பேரை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். இவர்களிடம், அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா விசாரணை நடத்தி வருகிறார்.
இதில், மன்சூர் அலிகானின் மகனுக்கும், கஞ்சா விற்பனை கும்பலுக்கும் உள்ள தொடர்பு என்ன, இவர்களுக்கு எப்படி பழக்கம், இதில் வேறு யாராவது தொடர்பில் உள்ளார்களா, யாருக்கெல்லாம் கஞ்சா ஆயில் விற்பனை செய்யப்பட்டது. எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* 3 பேருக்கு கஸ்டடி
கஞ்சா வழக்கில் கைதான கல்லூரி மாணவர்கள் வர்சல், ஆர்ணி, பாலாஜி ஆகிய 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஜெ.ஜெ.நகர் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அப்போது, 2 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து மாணவர்கள் 3 பேரையும் நேற்று முன்தினம் இரவு காவல்நிலையம் கொண்டு வந்து, துணை ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.
The post மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை விவகாரம் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உட்பட 4 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.