சென்னை: முதலமைச்சர் கோரியுள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். மழையால் உயிரிழந்தவர்களுக்கு மஜகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். புயல் மழை பாதிப்புக்காக தமிழ்நாடு முதல்வர் கோரியுள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு பாராபட்சமின்றி வழங்க வேண்டும். கடந்த காலங்களில் ஓரவஞ்சனை செய்தது போன்று இப்பவும் செய்யக்கூடாது எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
The post முதலமைச்சர் கோரியுள்ள நிவாரண நிதியை பாரபட்சமின்றி ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: தமிமுன் அன்சாரி வலியுறுத்தல் appeared first on Dinakaran.