×

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையில் நீர் திறப்பு 30,000 கன அடியாக குறைப்பு!!

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையில் நீர் திறப்பு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 30,000 கனஅடி, நீர்மட்டம் 118 (119)அடி, நீர் இருப்பு 7,079 மி. கன அடியாக உள்ளது. காலையில் 36,500 கனஅடியாக இருந்த நீர் திறப்பு, 30,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை தென்பெண்ணையில் நீர் திறப்பு 1.68 லட்சம் கன அடியாக இருந்தது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்துள்ளது. கிருஷ்ணகிரி, பாம்பாறு அணைகளில் நீர் திறப்பு குறைந்ததால் சாத்தனூருக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

 

The post சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையில் நீர் திறப்பு 30,000 கன அடியாக குறைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chatanur Dam ,Tenpenna Dam ,Thiruvannamalai ,
× RELATED சாத்தனுர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள...