வெள்ள பாதிப்புகளை வீடியோ கால் மூலம் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரிடம் கேட்டறிந்தார்

கடலூர், டிச. 3: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடலூர் வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திடம் வீடியோ கால் மூலம் கேட்டறிந்தார். கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்தது. மேலும் சாத்தனூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாநகர் மற்றம் கிராம பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள பாதிப்புகளை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

கடலூர் மாநகராட்சி முத்தையா நகர் பகுதியில் நேற்று காலை அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும், செல்போனில் வீடியோ கால் மூலமாக அமைச்சரிடம் பேசினார். தொடர்ந்து அமைச்சர், நேரடியாக களத்தில் இருந்து கரையோர பகுதிகளை சூழ்ந்துள்ள வெள்ள நீர் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண உதவிகள் குறித்து விளக்கினார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அமைச்சருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, ஐயப்பன் எம்எல்ஏ, மேயர் சுந்தரி ராஜா, மாநகர செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post வெள்ள பாதிப்புகளை வீடியோ கால் மூலம் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரிடம் கேட்டறிந்தார் appeared first on Dinakaran.

Related Stories: