மாவட்டத்தில் 3வது நாளாக மழை: கொல்லிமலையில் 103 மி.மீ., பதிவு

நாமக்கல், டிச.3: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை, மாவட்டத்தின் பல பகுதியில் விடாமல் மழை பெய்தது. நாமக்கல் நகரில் இரவு விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. கொல்லிமலையில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்பட்டது. மாவட்டத்தில் பிற பகுதியில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல இயங்கியது.

நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம் மில்லிமீட்டரில்: எருமப்பட்டி-25, குமாரபாளையம்- 15, மங்களபுரம்-62, மோகனூர்-19, நாமக்கல்-17, பரமத்திவேலூர்- 16, புதுச்சத்திரம்- 35, ராசிபுரம்- 52, சேந்தமங்கலம்- 39, திருச்செங்கோடு- 20, கலெக்டர் அலுவலகம்- 21, கொல்லிமலை- 103 மில்லிமீட்டர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்றும் மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

The post மாவட்டத்தில் 3வது நாளாக மழை: கொல்லிமலையில் 103 மி.மீ., பதிவு appeared first on Dinakaran.

Related Stories: