×

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளின் நீர் மட்டம் கணிசமாக உயர்வு

 

திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் பருவ மழை தொடங்கி தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நீர் இருப்பு கூடி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மி.கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 1,042 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 3,500 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 27 கன அடியாகவும் உள்ளது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மி.கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 145 மி.கன கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 223 கன அடியாக உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மி.கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2,742 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 876 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 209 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 324 மி.கன அடியாக உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 15 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மி.கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2,766 மி.கன அடியாக உள்ளது.

நீர் வரத்து வினாடிக்கு 819 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 103 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மொத்தத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மொத்தக் கொள்ளளவான 1,1757 மி.கன அடியில் தற்போது 7,019 மி.கன அடியாக நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளின் நீர் மட்டம் கணிசமாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallur ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் மழையின்...