×

பிஞ்சிவாக்கம் தடுப்பணை நிரம்பியது: மீன் பிடிக்கும் இளைஞர்களால் உயிர் இழப்பு ஏற்படும் அபாயம்

 

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. இந்நிலையில் மழையின் காரணமாக திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை முழுவதுமாக நிரம்பியது. தற்போது தடுப்பணை கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த தடுப்பணை நிரம்பி உபரி நீர் கூவம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் பிஞ்சிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தடுப்பணையில் நிரம்பிய நீரில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தினந்தோறும் தடுப்பணையில் இறங்கி குளித்தும், மீன் பிடித்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தாண்டு இதேபோல் ஆபத்தை உணராமல் குளித்த 2 பேர் இந்த தடுப்பணை நீரில் மூழ்கி இறந்து போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த தடுப்பணையில் ஆபத்தை உணராமல் குளித்தும், மீன் பிடித்தும் வரும் நபர்களை தடுக்க போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பிஞ்சிவாக்கம் தடுப்பணை நிரம்பியது: மீன் பிடிக்கும் இளைஞர்களால் உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Pinchiwakkam barrage ,Tiruvallur ,Thiruvallur ,Koovam river ,Binchivakkam ,Kadambathur ,Pinchivakkam barrage ,
× RELATED பிஞ்சிவாக்கம் தடுப்பணை நிரம்பியது:...