×

தங்கம் விலை சவரனுக்கு ரூ480 குறைந்தது


சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ480 குறைந்தது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் அதிரடியாக உயர்ந்து தினம், தினம் புதிய உச்சத்தை கண்டது. இதன் ஒரு பகுதியாக தீபாவளியன்று (அக்டோபர் 31ம் தேதி) ஒரு சவரன் தங்கம் ரூ59,640க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ560 அதிகரித்து ஒரு சவரன் ரூ57,280க்கு விற்பனையானது. 30ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ₹80 குறைந்து ஒரு சவரன் ரூ57200க்கு விற்கப்பட்டது.

1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே அன்றைய தினம் தங்கம் விற்றது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ₹60 குறைந்து ஒரு கிராம் ரூ7,090க்கும், சவரனுக்கு ₹480 குறைந்து ஒரு சவரன் ₹56720க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ₹100க்கு விற்பனையானது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனையானது.

The post தங்கம் விலை சவரனுக்கு ரூ480 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Savaran ,Diwali ,Sawaran ,Dinakaran ,
× RELATED வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை...