×

வெந்தயக்கீரை மசாலா

தேவையானவை:

பெரிய வெங்காயம்-2,
தக்காளி-4,
வெந்தயக்கீரை-2 கட்டு,
இஞ்சி-ஒரு துண்டு,
பூண்டு-3 பல்,
மிளகாய்தூள்-ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள்-கால் டீஸ்பூன்,
சீரகத்தூள்-அரை டீஸ்பூன்,
எலுமிச்சம்பழச் சாறு-ஒரு டீஸ்பூன்,
உப்பு-தேவைக் கேற்ப,
மல்லித்தழை-ஒரு கைப்பிடி.

செய்முறை:

கீரையை சுத்தம் செய்யுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு தட்டிக் கொள்ளுங்கள். குக்கரில் எண்ணெயை காயவைத்துவெங்காயம், வெந்தயக்கீரை, இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள், சிட்டிகை உப்பு சேர்த்து சிறிது வதக்கி,ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்கி, சத்தம் அடங்கியதும்மல்லித்தழை, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு கிளறுங்கள். எல்லா டிபனுக்கும் ஏற்ற சைட் டிஷ் இந்த வெந்தயக்கீரை கிரேவி.

The post வெந்தயக்கீரை மசாலா appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஸ்வீட் கார்ன் சூப்