×

சென்னை வளசரவாக்கத்தில் BMW காரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு..!!

சென்னை: சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் பின்புறம் நின்றிருந்த காரில் இருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வளசரவாக்கம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள ராஜகோபால் தெரு பகுதியில் BMW விலை உயர்ந்த கார் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் இன்று அதிகாலை துர்நாற்றம் வீசியதாக தகவல் வந்துள்ளது.

இதனை அடுத்து அப்பகுதி வழியாக சென்ற அக்கம் பக்கத்தினர் துர்நாற்றம் அதிகளவில் வருவதை கண்டு அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வளசரவாக்கம் போலீசார் காரை திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்த போலீசார் காருக்குள் இறந்த அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

அத்தகைய கார் பாண்டிச்சேரி பதிவெண் கொண்டது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த கார் எப்பொழுதிலிருந்து இருக்கிறது? இறந்த நபர் மதுபோதையில் உள்ளே படுத்து இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து உள்ளே வீசிவிட்டு சென்றார்களா என்ற பல்வேறு கோணங்களில் தற்போது வளசரவாக்கம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த உடலானது இறந்து 10 நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகாமையில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை வளசரவாக்கத்தில் BMW காரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : BMW ,Chennai's Bhasaravakkam ,Chennai ,Chennai Valasravakkam Police Station ,Rajagopal street ,Chennai Valasaravakkam Police Station ,
× RELATED ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்