சமயபுரம், நவ.29: உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தில் சமயபுரம் கோவில் அருகே மூன்று ஏக்கரில் மியாவாக்கு காடு அமைக்க 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான ஸ்தலமாக விலங்குவது சமயபுரம் மாரியம்மன் கோயிலாகும். இந்நிலையில் முந்தைய காலங்களில் மாரியம்மன் கோயிலை சுற்றி ஏராளமான விவசாய நிலங்கள் இருந்தபோது அதன் உரிமையாளர் பலரும் அப்பகுதியில் நிலங்களை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமாக எழுதியுள்ளார்.
இதில் ஒரு பகுதியாக சமயபுரத்தில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அருகிலுள்ள ஈச்சம்பட்டி பகுதியில் சமயபுரம் கோயிலுக்கு சொந்தமான நிலம் இருந்துள்ளது. அந்த கோயில் நிலத்தை கோயில் நிர்வாகம் மீட்டு மியாவாகி திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை கோயில் நிர்வாகம் மற்றும் தனியார் கிளப் இனைந்து செய்து வருகின்றனர். அதற்கான முன்னோட்டமாக நேற்று ரூ.3 லட்சம் செலவில் மியாவாக்கி திட்டத்தில் இந்த மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி ஐந்தாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மொத்தம் மூன்று ஏக்கரில் நடப்படும் மரக்கன்றுகளின் பராமரிப்பு செலவுகளையும், தனியார் கிளப் அமைப்பும் மற்றும் சமயபுரம் கோயில் நிர்வாகமும் சேர்ந்து பராமரித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சமயபுரம் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் தனியார் கிளப் தலைவர் பிரியா, இயக்குநர் பிரியதர்ஷினி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post சமயபுரம் கோவில் தோட்டத்தில் மியாவாக்கி காடு அமைக்க 10,000 மரக்கன்று நடும் பணி appeared first on Dinakaran.