முழுவதுமாக நிரம்பிய தடுப்பணை

 

திருவள்ளூர், டிச.2: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள தடுப்பணை முழுவதும் நிரம்பியது.

இதனால் தற்போது தடுப்பணை கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த தடுப்பணை நிரம்பி உபரி நீர் கூவம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் பிஞ்சிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post முழுவதுமாக நிரம்பிய தடுப்பணை appeared first on Dinakaran.

Related Stories: