- செங்குன்றம், மாதவரம் மாநில நெடுஞ்சாலை
- புழல்
- செங்குன்ராம்
- மாதவரம் மாநில நெடுஞ்சாலை
- அரசு ஆதி திராவிடர் நலத்துறை ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- செங்குன்ராம்
- மாதவரம் மாநில நெடுஞ்சாலை வடக்கு கரை
- கிராண்ட்லைன்
- தின மலர்
புழல், டிச. 2:செங்குன்றம், மாதவரம் மாநில நெடுஞ்சாலையில் பழுதான சாலைகளில் பேட்ச் ஒர்க் பணி நடந்து வருகிறது. செங்குன்றம், மாதவரம் மாநில நெடுஞ்சாலை வடகரை, கிரான்ட்லைன் ஆகிய பகுதிகளில் அரசு ஆதி திராவிடர் நலத்துறை ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடக்கப்பள்ளி மற்றும் கிரான்ட்லைன் ஊராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாலையின் 2 பக்கங்களிலும் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக பைக்கில் செல்லும் பொதுமக்கள் சாலை பள்ளங்களில் விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒருசில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநில நெடுஞ்சாலைத்துறையினருக்கு வடகரை, கிரான்ட்லைன் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டன. இதனையடுத்து திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு, அம்பத்தூர் உட்கோட்ட பொறியாளர் மகேஸ்வரன் ஆகியோரின் மேற்பார்வையில் இளநிலை பொறியாளர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று வடகரை பகுதியிலிருந்து கிரான்ட்லைன் வரை இரண்டு கிமீ தூரத்தில் போர்க்கால அடிப்படையில் இயந்திரங்கள் மூலம் பேட்ச் ஒர்க் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணி இரண்டு நாட்களில் முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post செங்குன்றம், மாதவரம் மாநில நெடுஞ்சாலையில் பழுதான சாலைகளில் பேட்ச் ஒர்க் பணி appeared first on Dinakaran.