×

நிலக்கோட்டை பள்ளபட்டியில் குழந்தைகளுக்கு அன்னதானம்

 

நிலக்கோட்டை, நவ. 30: நிலக்கோட்டை ஒன்றியம் பள்ளபட்டியில் உள்ள புதுவசந்தம் ஆதரவற்ற மனநலம் குன்றிய குழந்தைகள் இல்லத்தில் தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் காமாட்சி, துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், பொருளாளர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் வரவேற்றார். விழாவில் கட்சியினர் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து குழந்தைகளுக்கு புத்தாடைகள், அன்னதானம் வழங்கியதுடன் ஒரு ஆண்டிற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கினர், இதில் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு துணை செயலாளர் ஜான் போஸ்கோ, ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜாங்கம், வேல்முருகன், பாலசந்திரன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நிலக்கோட்டை பள்ளபட்டியில் குழந்தைகளுக்கு அன்னதானம் appeared first on Dinakaran.

Tags : Nilakottai Pallapatti ,Nilakottai ,Tamil Nadu ,Deputy Chief Minister ,DMK ,Youth Secretary ,Udayanidhi Stal ,Puduvasantham Homeless Children's Home ,Pallapatti ,Nilakottai Union ,Western Union ,Karikalapandian ,
× RELATED பெண் மீது சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை