×
Saravana Stores

பைனான்ஸ் ஊழியர் மண்டை உடைப்பு; 3 பேருக்கு வலை

சேலம், நவ.30: சேலம் கருப்பூர் வெள்ளக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் திவாகர் (24). இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த புதன்கிழமை வெள்ளக்கல்பட்டியில் உள்ள ஏடிஎம்மில் பணத்தை போடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் திவாகரின் தம்பியான கார்த்தி என்பவரிடம் தகராறில் ஈடுபட்ட நவீன், அரவிந்த், அய்யனார் ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர்களிடம், திவாகர், எதற்காக தனது தம்பியிடம் தகராறு செய்தீர்கள் என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் பீர் பாட்டிலை எடுத்து திவாகர் மண்டையில் சரமாரியாக தாக்கினர். இதில் திவாகரின் மண்டை உடைந்தது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3பேரையும் தேடி வருகின்றனர்.

The post பைனான்ஸ் ஊழியர் மண்டை உடைப்பு; 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Binance ,Salem ,Divakar ,Salem Karuppur Vilakalpatty ,Vilakkalpatty ,Dinakaran ,
× RELATED சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய குண்டூசி