×
Saravana Stores

டாக்டர் சீட்டு வாங்கித்தருவதாக ரூ.59 லட்சம் மோசடி: காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது

ஆவடி: டாக்டர் சீட்டு வாங்கிதருவதாக பல தவணைகளாக ரூ.59 லட்சம் வரை வாங்கி மோசடி செய்த காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர். கேளம்பாக்கம் அடுத்த படூர் ஓஎம்ஆர் சாலையை சேர்ந்தவர் தீபா (44). இவர், கடந்த செப்டம்பர் மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்திருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய உறவினர் லதா வாயிலாக அவரது தோழி அனிதா (48) என்பவர் கடந்த 2019ல் எனக்கு அறிமுகமானார். அனிதா, தமிழக காங்கிரசில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், ஆல் இந்தியா மெடிக்கல் கவுன்சில் அதிகாரிகளை தெரியும் எனவும் என்னிடம் கூறி, மூத்தமகளுக்கு மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறினார்.

இதை நம்பி, அனிதாவுக்கும், அவரது நண்பர் கோவாவை சேர்ந்த முகமதுகான் என்பவருக்கும் கடந்த 2019 முதல் பல்வேறு தவணைகளாக 59 லட்ச ரூபாய் வரை கொடுத்தேன். பல நாட்களாகியும் மருத்துவ சீட் வாங்கி தராமல் ஏமாற்றினார். எனவே, அனிதா மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுதர வேண்டும். இவ்வாறு புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது மருத்துவ சீட் வாங்கிதருவதாக மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் சாந்திபுரத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி அனிதாவை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கூட்டாளி முகமது கானை போலீசார் தேடி வருகின்றனர்.

The post டாக்டர் சீட்டு வாங்கித்தருவதாக ரூ.59 லட்சம் மோசடி: காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Tags : Congress ,Avadi ,Deepa ,Badur OMR road ,Kelambakkam.… ,Dinakaran ,
× RELATED ஆவடி மாநகரத்திற்கு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் நியமனம்