- திருப்பம் நகர்
- செம்பியம் காவல் நிலையம்
- இசைவாணி
- ரஞ்சித்
- பெரம்பூர்
- இசைவாணி
- திருவிக். நகர்
- செம்பியம்
- திருவிக். நகர், செம்பியம் காவல் நிலையம்
பெரம்பூர்: பிரபல கானா பாடகி இசைவாணி, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பாடிய பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்து அமைப்புகள் சார்பில் காவல்நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவிக.நகர், செம்பியம் ஆகிய காவல் நிலையங்களில் கானா பாடகி இசைவாணி, நீலம் பவுண்டேஷன் இயக்குனர் டைரக்டர் பா.ரஞ்சித் ஆகியோரை கைது செய்யக்கோரி புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, அகில பாரத இந்து மகா சபா சென்னை மாவட்ட அர்ச்சகர் பேரவையின் தலைவர் ஆனந்தன் சுவாமிஜி, திருவிக.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அகில பாரத இந்து மகா சபையின் வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயபிரகாஷ், செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது;
அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை தூண்டுகின்ற வகையில் நீலம் பவுண்டேஷன் நிறுவனர் டைரக்டர் பா.ரஞ்சித் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி மதக் கலவரத்தையும் பயங்கரவாதத்தையும் தோற்றுவிக்கும் விதமாக ஐயப்பனையும் அவரை வணங்கும் பக்தர்களையும் இழிவுப்படுத்துகின்ற வகையில் பாடல் பாடியுள்ளார்.
இது உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் பயங்கரவாதத்தையும் மதக் கலவரத்தையும் தூண்டுகின்ற நீலம் பவுண்டேஷன், அதன் நிறுவனர் டைரக்டர் பா.ரஞ்சித் மற்றும் கானா பாடகி இசைவாணி ஆகியோரை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
The post திருவிக. நகர், செம்பியம் காவல் நிலையத்தில் கானா பாடகி இசைவாணி, இயக்குனர் பா. ரஞ்சித்தை கைது செய்ய புகார் appeared first on Dinakaran.