பாதாம் பிசின் – 4 முதல் 5
பால் – 1 கப்
வெண்ணிலா ஐஸ்க்ரீம் – 1 ஸ்கூப்
நன்னாரி சிரப் – 2 ஸ்பூன்
சர்க்கரை – 1 ஸ்பூன்
செய்முறை:
ஜிகர்தண்டா செய்ய முடிவெடுத்துவிட்டால் அதற்கு முதல் படியாக பாதாம் பிசினை 4-5 மணி நேரம் அல்லது முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.அது நன்றாகப் பொங்கி வரும். இதை வைத்து 2 கிளாஸ் ஜிகர்தண்டா வரை தயாரிக்கலாம். உங்களுக்கு அதிகம் செய்ய விருப்பமிருந்தால் அதற்கேற்ப அளவை மாற்றிக்கொள்ளவும். இதை ஓரமாக வைத்துவிடவும்.நன்கு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து நன்கு கேரமலைஸ் செய்யவும். இதன்மூலம் ஜிகர்தண்டாவுக்கு நல்ல நிறத்தைப் பெறலாம்.சர்க்கரையில் தண்ணீர் சேர்க்காமல் தேன் நிறத்திற்கு வரும்வரை நன்கு உருக்கவும். தேன் நிறத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.இப்பொது அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.பாலில் கேரமலைஸ் செய்யப்பட்ட சர்க்கரை நன்கு கரையும் வரை கிளறவும்.அதன்பின் பால் அளவு 3/4 ஆக குறையும் வரை கொதிக்க வைத்து பின்னர் அடுப்பை அணைத்து விட்டு, பாலை நன்றாக குளிர வைக்கவும்.இப்போது ஜிகர்தண்டா செய்ய அனைத்து பொருட்களும் தயார்.இரண்டு டம்ளர்களில் பாதாம் பிசினை பிரித்து அதில் நன்னாரி சிரப் சேர்க்கவும்.அதன்பின் நன்கு குளிர்விக்கப்பட்ட பாலை சேர்க்கவும். இதை நன்றாக கலக்கிவிட்டு பின்னர் அதன்மேல் வெண்ணிலா ஐஸ்க்ரீம் வைத்து உடனடியாக பரிமாறலாம்.கூடுதல் சுவைக்கு முந்திரி, பாதாம், Tutti Frutti போன்றவற்றை அதனுடன் சேர்த்து பரிமாறலாம்.இப்போது சுவையான ஒரிஜினல் மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி.
The post ஜிகர்தண்டா ரெசிபி appeared first on Dinakaran.