- சாலை விபத்து
- உத்திரப்பிரதேசம்
- ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ்வே
- கான்பூர்
- கன்னோஜ், உத்தரபிரதேசம்
- லக்னோ
- எட்டாவா மாவட்டம்
- சாலை
- தின மலர்
கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் அருகே இன்று நடந்த சாலை விபத்தில் 5 மருத்துவர்கள் உயிரிழந்தனர். லக்னோவில் சக ஊழியரின் திருமண விழாவில் கலந்து கொண்டு மருத்துவர்கள் சொகுசு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது லக்னோவில் இருந்து எட்டாவா மாவட்டம் சாய்பாய் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த அந்த கார், கன்னாஜ் மாவட்ட எல்லையில் வந்தபோது சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி மறுபக்கம் பாய்ந்துள்ளது. பின்னர் எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த பயங்கர விபத்தில், கார் கடுமையாக சேதமடைந்தது. காரில் இருந்த 4 டாக்டர்கள், ஒரு லேப் டெக்னீசியன் என ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த டாக்டர்கள், டாக்டர் அனிருத் வர்மா, டாக்டர் சந்தோஷ் குமார் மவுரியா, டாக்டர் ஜெய்வீர் சிங், டாக்டர் அருண் குமார் மற்றும் டாக்டர் நர்தேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முதுகலை மருத்துவ மாணவர் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு கன்னாஜ் மாவட்டம் திருவா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் சாய்பாய் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றியவர்கள். இந்த விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததோடு, விபத்து நடந்த இடத்தில் நிலைமையை மதிப்பீடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post உத்தர பிரதேசத்தில் பயங்கர சாலை விபத்து: ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் கார் லாரி மீது மோதியதில் 4 மருத்துவர்கள் உட்பட 5 பேர் பலி!! appeared first on Dinakaran.