×
Saravana Stores

செகந்திராபாத்தில் சப்பாத்தி தொண்டையில் சிக்கி மாணவன் பலி

திருமலை : செகந்திராபாத்தில் சப்பாத்தி தொண்டையில் சிக்கி 6ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தைச் சேர்ந்தவர் விரால்ஜெயின் (11). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு புறப்பட்ட மாணவனுக்கு வீட்டில் தயார் செய்த சப்பாத்திரோல் கொடுத்து அனுப்பினர்.

அதனை பெற்றுச்சென்ற மாணவன், மதிய உணவு இடைவெளியின்போது சக மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது சப்பாத்தி திடீரென தொண்டையில் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதனால் மூச்சுவிடாமல் மாணவன் தவித்தான்.

இதனைக்கண்ட சக மாணவர்கள் ஆசிரியருக்கு தெரிவித்தனர். உடனடியாக மாணவனை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வழியிலேயே மாணவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செகந்திராபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post செகந்திராபாத்தில் சப்பாத்தி தொண்டையில் சிக்கி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Sapati ,Secunderabad Thirumalai ,Chadhi ,Secunderabad ,Viraljain ,Secunderabad, Telangana ,
× RELATED பாட்னா சாஹிப் குருத்வாரா: தன் கையால்...